இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் 2 இளம்வீரர்கள் சேர்ப்பு – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

BCCI
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்று அடைந்தது. அதன்பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கெதிராக அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

IND

- Advertisement -

ஏற்கனவே ஐ.சி.சி கோப்பைகளை தொடர்ந்து இழந்து வரும் இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை ஐசிசி தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது இந்திய அணி அங்கு முகாமிட்டு உள்ளது.

இந்நிலையில் கவுண்டி அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் பங்கேற்ற சில இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதன்படி ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் கான் ஆகியோர் காயமடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் அவர்களுக்கு மாற்று வீரராக எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

sundar 2

இந்நிலையில் பிசிசிஐ சார்பாக தற்போது இரண்டு இளம் இந்திய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

sky 1

ஏற்கனவே இங்கிலாந்தில் இருக்கும் அணியுடன் இவர்கள் 2 பேரும் இவர்கள் இருவரும் விரைவில் இணைவார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஏற்கனவே துவக்க வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியது குறிபிடத்தக்கது.

Advertisement