ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து அடுத்த முக்கியமான தொடரை நடத்துவதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் – தலைவலியில் பி.சி.சி.ஐ

Ganguly

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடர் தற்போது 29 லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர் வீரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக வீடுகளில் முடங்கி இருந்த ரசிகர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கை அளித்து வந்த இந்த ஐபிஎல் தொடர் ஆனது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

IPL

மேலும் இந்த ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது துவங்கும் என்று யாராலும் உறுதியாக கூற முடியாத சூழல் உண்டாக்கியுள்ளது. இந்த தொடரில் கொல்கத்தா அணி வீரர்கள், சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி என பல அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து இந்த ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ தள்ளி வைத்துள்ளது.

- Advertisement -

மேலும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ராஜீவ் சுக்லா இன்று காலை அறிவித்தார். அதன்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஊழியர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரது பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த சமரசமும் கிடையாது என்று கூறி இந்த தொடரை ஒத்தி வைத்துள்ளார். இந்த தொடர் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை.

இதனால் மீண்டும் எப்போது ஐபிஎல் தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது மற்றொரு தொடரையும் நடத்துவதில் பிசிசிஐக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி t20 உலகக் கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்நேரத்தில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக கோரத்தாண்டவத்தை நடத்தி வருவதால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை எவ்வாறு நடத்துவது என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது.

- Advertisement -

இருப்பினும் கடந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் போனதால் அந்த தொடரை முழுவதுமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருந்தது பிசிசிஐ. அதன் காரணமாக டி20 உலகக்கோப்பை ஒருவேளை இந்தியாவில் நடைபெற சாத்தியமில்லை என்றால் நிச்சயம் டி20 உலகக்கோப்பை யூ.ஏ.இ யில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement