பி.சி.சி.ஐ யின் பார்வை நடராஜனின் மீது பட அவர் எடுத்த இந்த 3 விக்கெட் தான் காரணம் – விவரம் இதோ

Nattu-2
- Advertisement -

இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்தவுடன் அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான வீரர்கள் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

INDvsAUS

- Advertisement -

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்திற்கும் தனித்தனி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்ட. விராட் கோலி, கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் மட்டுமே மூன்று விதமான போட்டிகளிலும் இடம் பிடித்து இருந்தனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்னதாகவே அதிகபட்சமான வீரர்களை இந்தியா இந்த வருடம் அழைத்துச் செல்கிறது.

குறிப்பாக நான்கு வலைப் பயிற்சியில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களையும் கூட்டிச் செல்கிறது. தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு டி 20 அணிகள் நேரடியாக இடம் கிடைத்திருக்கிறது. மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த தங்கராசு நடராஜனுக்கு அணியில் இடம் கிடைத்து இருக்கிறது.

natarajan

ஆனால் இவர் வலைப்பயிற்சியில் பந்துவீச்சாளராக அழைத்துச் செல்லப்படுவர் இவருடன் சேர்த்து நான்கு இளம் பந்து வீச்சாளர்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார் நடராஜன் ஒரே ஓவரில் தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் 6 யார்க்கர் பந்துகளை வீசியவது வாழ்க்கையை மாற்றிவிட்டது.

nattu 1

குறிப்பாக விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ஆண்ட்ரு ரசல் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக உடனடியாக இந்திய தேர்வு குழுவினரின் கண்ணும் விராட் கோலியின் கண்ணும் இவர் மீது பட்டு விட்டது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் இதனை தொடர்ந்து இவருக்கு இந்திய அணியில் வெகு சீக்கிரம் இடம் கிடைக்கும் என்றும் தெரிகிறது.

Advertisement