பி.சி.சி.ஐ-யின் அடுத்த தலைவர் யார் தெரியுமா..?

பி.சி.சி.ஐ.,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளது. லோதா குழுவின் சட்டத்தின் படியே தலைவர் தேர்வு நடைபெறும் என்று நம்பப்படுகிறது. தற்போது பி.சி.சி.ஐ .,யின் தலைவராக சி.கே.கண்ணா என்பவர் உள்ளார் அவருடைய பதவிக்காலம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது அடுத்த தலைவருக்கான தேடல் நடைபெற்று வருகிறது.

ganguly

இதுகுறித்து தற்போது ஒரு முக்கிய செய்தி வெளிவந்துள்ளது  அதில் அடுத்த தலைவருக்கு சவ்ரவ் கங்குலியின்  பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது இது உண்மை என்று உறுதியானால் கண்டிப்பாக  பி.சி.சி.ஐ .,யின் அடுத்த தலைவராக கங்குலிக்கு நிறைய வாய்ப்பு உள்ளதாக  பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே  பி.சி.சி.ஐ.,யின் சில முக்கிய பொறுப்புகளில் கங்குலி பணியாற்றி உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

லோதா குழுவின் சட்டதிட்டங்களுக்கு பலரது விண்ணப்பங்கள் சரிவராது என்றும் மேலும் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் தலைவராக பல ஆண்டு பணிபுரிந்ததாலும் அவருக்கு எளிதாக இந்த தலைவர் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது மேலும் இவர் கிரிக்கெட் ஆலோசகராகவும் ஐ.பி.ல் போன்ற தொடர்களில் மேல்மட்ட அதிகாரியாக பணியாற்றிய அனுபவமும் இவரிடம் உள்ளது.

ganguly-bcci 2

கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் தான் இந்திய அணி பெரிய அணியாக உருவெடுத்தது இப்போது இவர்  பி.சி.சி.ஐ.,யின் தலைவராக நியமிக்கப்பட்டால் இந்திய அணியை அடுத்த தரத்திற்கு உயர்த்துவார் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. கங்குலியின் ஆளுமை திறன் உலகறிந்ததே.!