கோலியின் கேப்டன் பதவி பறிபோகிறதா ? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து – பி.சி.சி.ஐ விளக்கம்

Kohli-2

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக தலைமைதாங்கி வழி நடத்துகிறார். என்னதான் இவர் அணியை சிறப்பாக வழி நடத்தினாலும் ஐ.சி.சி நடத்தும் கோப்பையை வெல்லவில்லை என்பது மட்டுமே இவர் மீது உள்ள குறையாக உள்ளது. மற்றபடி இந்திய அணியின் சிறப்பான கேப்டனாக இதுவரை விராட் கோலி இருந்து வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி பல சிறப்பான வெற்றிகளை குவித்து வருகிறது.

Kohli

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி கேப்டன் பதவியை துறக்க உள்ளார் என்றும் அவருக்கு பதிலாக ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் பல செய்திகள் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியாகின.

- Advertisement -

மேலும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நிச்சயம் இந்த மாற்றம் இருக்கும் என்றும் அதனை கோலியே அறிவிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்தக் கருத்துக்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமால் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

Kohli

இந்திய அணியின் கேப்டன்ஷிப் குறித்த இந்த செய்திகள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. இது ஒரு வதந்தி அவ்வளவுதான் கேப்டன் பொறுப்பு விவகாரம் குறித்து நாங்கள் இதுவரை எதையும் கலந்து ஆலோசிக்கவில்லை. கேப்டன் பொறுப்பு விவகாரம் குறித்து கலந்தாலோசித்தல் மட்டுமே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட முடியும். இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் கோலிதான் கேப்டன் என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Kohli-3

இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. மேலும் 20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்தவேண்டி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சொல்வதெல்லாம் வதந்திதான் என்று அவரின் இந்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement