நாங்க பி.சி.சி.ஐ ஒப்பந்தப்பட்டியலில் நடராஜனின் பெயரை சேர்க்காததற்கு இதுவே காரணம் – பி.சி.சி.ஐ விளக்கம்

Nattu
- Advertisement -

பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் அதனுடைய காண்ட்ராக்ட் வீரர்களின் பட்டியலை வெளியிடும். அப்படி சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான ( அக்டோபர் 2020 – செப்டம்பர் 2021) வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த காண்ட்ராக்ட் நான்கு விதமாக பிரிக்கப்படும். கிரேடு A+ கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 7 கோடி ஆகும்.கிரேடு A கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 5 கோடி ஆகும்.கிரேடு B கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று கோடி ஆகும். கடைசி கிரேடான கிரேடு C கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு கோடி ஆகும்.

ind

- Advertisement -

கிரேடு A+ வீரர்கள்

விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா

கிரேடு A வீரர்கள்

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, அஜிங்கிய ரஹானே, ஷிகர் தவான், கே எல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா

கிரேடு B வீரர்கள்

- Advertisement -

விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் மற்றும் மயங்க் அகர்வால்

கிரேடு C வீரர்கள்

- Advertisement -

குல்தீப் யாதவ், சைனி, தீபக் சஹர், சுப்மன் கில், ஹனுமன விஹாரி, அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் இயர், வாஷிங்டன் சுந்தர், சஹால் மற்றும் முகமது சிராஜ்

nattu

இந்த காண்ட்ராக்ட் பட்டியலிலின் கீழ் உள்ள வீரர்கள் அந்த ஆண்டிற்கான அடிப்படை உரிமையை பெற்றுக் கொள்வார்கள். இந்தப் பட்டியலிலுள்ள வீரர்களை தான் உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் விளையாட வைக்கும் ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முடிவை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும்.

அந்த வகையில், இந்த காண்ட்ராக்ட் பட்டியலில் அனைத்து வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தாலும் சென்ற ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்காக களம் இறங்கிய நல்ல வகையில் விளையாடி கொடுத்த தங்கராசு நடராஜனின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.

nattu

நடராஜன் சென்ற ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய தொடரில் மூன்று பார் மேட்டில் களமிறங்கி மிக பெரிய அளவில் அசத்தினார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் கூட ஒரு சில போட்டிகளில் விளையாடினார். நன்றாக விளையாடி வரும் நடராஜனின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்கிற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை நடராஜனை பிசிசிஐ ஒதுக்கி வருகிறதா என்பது குறித்த கேள்விகளும் தற்போது சமூக வலைதளங்களில் முன்னெடுத்து வைக்கப்பட்டு வருகின்றன.

Nattu

இந்நிலையில் இந்த லிஸ்டில் நடராஜன் பெயர் இடம்பெறாததன் காரணத்தை தற்போது பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் பிசிசிஐ கான்ட்ராக்ட் பெற வேண்டும் என்றால் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் 10 டி 20 போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். நடராஜன் இரண்டு ஒருநாள், ஒரு டெஸ்ட், நான்கு டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். இதனால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை..

Advertisement