புவனேஷ்வர் குமார் அந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார். அதனால தான் வாய்ப்பு கொடுக்கல – பி.சி.சி.ஐ அதிரடி

Bhuvi
- Advertisement -

ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணி பிசிசிஐ-யால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் அதே அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாள்தோறும் எழுந்து வருகின்றன.

bhuvi

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து மைதானத்தில் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடிய புவனேஸ்வர் குமார் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் தற்போது புவனேஸ்வர் குமார் ஏன் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்பது குறித்து பிசிசிஐ தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

2020 ஐ.பி.எல் சீசனிலும் விளையாடும்போது காயம் அடைந்து வெளியேறிய பின்னர் அந்த தொடர் முழுவதும் விளையாடமுடியாமல் போனது. அதன் பின்னர் சையது முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே டிராபி ஆகியவற்றில் விளையாடி பின்னர் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெற்றாலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் பாதியிலேயே மீண்டும் காயமடைந்து வெளியேறியுள்ளார்.

Bhuvi 1

இதிலிருந்து அவர் காயம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை என்றும் மீண்டும் மீண்டும் அவர் காயத்திற்கு உள்ளாவதால் அவர் தொடர்ந்து விளையாட தற்போது தகுதியாக இல்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடர் எனவே சிறப்பான பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இருந்தாலும் 5 போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அவர் இன்னும் உடற்தகுதி பெறவில்லை.

Bhuvi-1

காயத்திற்கு பிறகு அவர் முதல் தர கிரிக்கெட் விளையாடவில்லை. அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால் நீண்ட நேரம் பந்து வீச வேண்டி இருக்கும் அதற்க்கு புவி இன்னும் தயாராகவில்லை. இந்த சில காரணங்களால் அவர் டெஸ்ட் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெளிவாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement