இந்திய வீரர்களை தொடர்ந்து மிகப்பெரிய தொகையை கொரோனா பாதிப்பிற்காக அளித்த பி.சி.சி.ஐ – இத்தனை கோடிகளா ?

BCCI
- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவே அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியிலான இழப்பை இந்தியா சந்திக்க நேரிடும். இதன் காரணமாக இந்தியா முழுவதும் மக்களுக்கு அடுத்த இரண்டு மாதம் மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படும் என்று தெரிகிறது.

corona

- Advertisement -

அதனால் இதற்குகேற்றார் நிதி அமைச்சர் அவர்கள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடியை ஒதுக்கி அதற்கான பணிகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனால் பாதிக்கப்படும் தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு முதியோர்களுக்கும் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காகவும் மத்திய மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன.

இதனைத் தாண்டி இதற்கான நிதி இந்தியாவிடம் பத்தாது போல் இருக்கிறது. இதனை மனதில் வைத்து இந்திய பிரதமர் மக்களிடம் நிதியை கோறியுள்ளார். பேரிடர்களின் போது இதுபோன்ற நிதியை மக்களிடம் இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

bcci

இதனை கேட்ட உடன் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்கள், பிரபலங்களும், விளையாட்டு வீரர்கள், திரைநட்சத்திரங்கள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்திய அரசாங்கத்திற்கு தானாக முன்வந்து நிதியுதவி அளித்து வருகிறது.

- Advertisement -

இதில் டாட்டா நிறுவனத்தின் நிறுவனரான ரத்தன் டாடா ரூபாய் 1500 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாயும், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 51 லட்சம் உன் கொடுத்துள்ளனர். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 51 கோடி ரூபாய் பிரதமர் மோடி நிவாரண நிதிக்காக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BCCI

ஏற்கனவே கம்பீர் 50 லட்சம், கங்குலி 50 லட்சம், சச்சின் 50 லட்சம் மற்றும் ரெய்னா 52 லட்சம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement