குற்றத்தை தானாக வந்து ஒப்புகொண்டால் மன்னிப்போம். இல்லைனா 2 வருட ஜெயில் – பி.சி.சி.ஐ அதிரடி அறிவிப்பு

BCCI

இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை பல இளம் வீரர்கள் இடம் பிடித்து விளையாடி உள்ளனர். மேலும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காகவே சிலர் காத்திருக்கின்றனர். தேசிய அணியில் தங்களது வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று சில வீரர்கள் தங்களது உண்மையான வயதை மறைப்பது உண்டு. ஏனெனில் குறிப்பாக இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டோர், 23 வயதுக்கு உட்பட்டோர் என பல பிரிவுகளில் தேசிய அணிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

u 19 ind 1

அந்த தேர்வுகளில் வீரர்கள் இடம் பிடிக்கவும் மேலும் அதிக ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடுவதற்காகவும் தங்களது வயதுகளை மாற்றி சர்டிபிகேட் கொடுத்து விளையாடி வருவதும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகிறது. மேலும் அப்படி சில வீரர்கள் தங்களது வயதைக் குறைத்துக் காட்டி அணிகள் முறைகேடாக இடம்பிடித்து விளையாடுகிறார்கள்.

அப்படி விளையாடிய சில வீரர்களை கண்டுபிடித்து பிசிசிஐ சில ஆண்டுகள் தடையும் விதித்துள்ளது. அதன்படி சில இளம் வீரர்கள் தடைசெய்யப்பட்டு நாம் கண்டுள்ளோம். இதுபோன்ற வயது முறைகேடு விவகாரத்தில் சிக்கிய வீரர்கள் சிலர் கிரிக்கெட் வாழ்க்கையும் வீணாகி விடுகிறது. தற்போதைய இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார்.

ind u 19

அவரது தலைமையில் வயது முறைகேட்டில் ஈடுபடும் வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதனை சரியாக கையாள வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது வயது முறைகேட்டில் ஈடுபடும் ஈடுபட்ட வீரர்கள் தானாக முன்வந்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் சான்றிதழில் திருத்தம் செய்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். இல்லையெனில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

u-19

மேலும் தண்டனைக்கு பின்பு மாநில மற்றும் தேசிய அணிகளுக்கு இடம் பெற முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வயது முறைகேடு தவிர்த்து குடியேற்றம் குறித்த முறைகேட்டில் ஈடுபட்டால் வீரர்களுக்கு பொது மன்னிப்பு என்பதே கிடையாது என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.