எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை ஐசிசி-யின் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது துபாய் சென்றடைந்துள்ளது. மேலும் டி20 சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கும் குறிவைத்துள்ளது.
கவுதம் கம்பீருக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு :
இப்படி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரினை இந்திய அணி கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருவதால் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே வெறியான விதிமுறைப்படி இம்முறை இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்பத்தாரோ, உறவினர்களோ பயணிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தொடர் வெறும் 19 நாட்கள் மட்டுமே நடைபெற இருப்பதால் வீரர்கள் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் வீரர்களுக்கு மட்டுமின்றி இந்தியர்களின் பயிற்சியாளரான கௌதம் கம்பீருக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கம்பீர் தனது உதவியாளரை அங்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏனெனில் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு அவர் எங்கு சென்றாலும் தன்னுடைய உதவியாளரை அழைத்துச் சென்று இந்திய அணியின் வீரர்களுடன் தங்க வைத்துள்ளார்.
ஆனால் கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் இருந்து அவர் கம்பீருடன் பயணிக்கவில்லை. ஆனாலும் கம்பீர் தனது சொந்த செலவில் அவரது உதவியாளர் தனியாக தங்க வைத்திருந்தார். அதேபோன்று சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான சுற்றுப்பயணத்திலும் கம்பீரின் உதவியாளர் இந்திய அணியுடன் பயணிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தோனியின் கண்களை பார்த்தால் பயம் வரும்.. களத்தில் எப்போதுமே அவரது குணம் இதுதான் – ஷிகர் தவான் பகிர்வு
ஒருவேளை அவர் விருப்பப்பட்டு அங்கு சென்றால் சொந்த செலவில் செல்லலாம் என்றும் மைதானத்தில் வீரர்களுடன் இல்லாமல் தனியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



