ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள ஒருவருக்கு கொரோனா . திடீர் திருப்பம் – யார் அவர் ?

BCCI

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்கிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த மொத்த அணியில் 31 பேர் இருக்கின்றனர்.

Ind

தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வாசிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன் ஆகியோருக்கும் இடம் கிடைத்திருக்கிறது. ரோஹித் சர்மாவின் பெயர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் துபாயிலிருந்து அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு செல்வார்கள். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட ஹனுமா விஹாரி, செட்டேஸ்வர் புஜாரா ஆகிய வீரர்கள் நேற்று முன்தினம் துபாய்க்கு சென்றனர்.

அவர்களுடன் சேர்த்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அணியின் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் துபாய்க்கு வந்து சேர்ந்துள்ளனர்.

Practice

துபாய் வந்த பின்னர் உடனடியாக அனைவரும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். தனிமைப்படுத்தல் முன்பாகவே இந்திய அணியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு மட்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.

- Advertisement -

Bharath Arun

மேலும் மற்ற வீரர்கள் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் ஒரு நாளுக்கு இரண்டு முறை வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்று தெரிந்தவுடன் தான் அனைவரும் ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு சென்றவுடன் ஆஸ்திரேலியாவிலும் 14 நாட்கள் அனைவரும் தனி ஹோட்டல் அறையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.