இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் இவர்தான். முடிவு செய்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

ravi koli 2

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து ஜூலை 30 ஆம் தேதியோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது. இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு கபில்தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் ரவிசாஸ்திரி பதவி காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி 70 சதவீதத்துக்கு மேல் வெற்றிகளை குவித்து உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா டெஸ்ட் வெற்றி, ஆசிய கோப்பை வெற்றி உலகக்கோப்பை அரையிறுதி என அசத்தியுள்ளது. இதனால் அடுத்து வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு வர இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரைக்கும் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார்.

Ravi

மேலும் அவருடன் பதவி வகித்த அனைவரும் தொடர்வார்கள் என்று ஆலோசனை குழுவில் உள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் ரவி சாஸ்திரி அதிகாரபூர்வமான பயிற்சியாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement