இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். இதன் காரணமாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 2027 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருந்து வருகிறது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ போட்ட நிபந்தனை :
அந்த வகையில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக விளையாட இருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் இந்த தொடரானது வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர்கள் இருவரையும் தேர்வு செய்ய தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் அவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து முற்றிலுமாக ஓய்வினை அறிவிக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்றால் ஒரு முக்கிய நிபந்தனையை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலில் : ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் இந்திய அணி தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடர்களுக்கு மத்தியில் இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபியும் நடைபெறுகிறது. எனவே இனிவரும் எந்த தொடரையும் தவறவிடாமல் விளையாடும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விஜய் ஹசாரே தொடரிலும் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : கொஞ்சம் இருங்க பாய்.. கான்வே, கரண் உட்பட 6 பேர் கழற்றி விடப் படுகிறார்களா? சிஎஸ்கே வெளியிட்ட அறிவிப்பு
அப்படி தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி அவர்கள் தங்களை நிரூபித்து வந்தால் நிச்சயம் 2027 உலக கோப்பை தொடரில் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளது. ஒருவேளை அவர்கள் உள்ளூர் போட்டியில் விளையாடவில்லை என்றால் அவர்களை இந்திய அணியின் எதிர்கால திட்டத்திலிருந்து நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



