எந்த டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் அணியில் இணைவார் – தெளிவான பதிலை சொன்ன பி.சி.சி.ஐ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெகுவிரைவில் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த அதிரடி துவக்க வீரரான ரோகித் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும் பிட்னஸ் டெஸ்டில் அவர் தேர்வு அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் அவர் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு விட்டதற்கான சான்றிதழும் அளித்துள்ளதால் அவர் விரைவில் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணியில் இணைவார் என்று கூறப்பட்டது.

rohith

- Advertisement -

இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டவை : நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் அவர் காயத்தால் அவதிப்பட்டார். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் கடைசி சில போட்டிகளில் விளையாடி மும்பை அணிக்காக ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்றுத்தந்தார்.

இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைத்தும் அவர் நாடு திரும்பினார். நாடு திரும்பிய ரோஹித் தனது தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆஸ்திரேலியா திரும்பாமல் இருந்தார். மேலும் அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் சரியாகாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி சிகிச்சை பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர் முழுமையாக காயத்தில் இருந்து மீண்டு உள்ளதால் அவர் ஆஸ்திரேலியா புறப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

rohith 1

மேலும் ரோகித் முழுமையாக குணம் அடைந்து விட்டதால் வரும் டிசம்பர் 14ஆம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்வது உறுதியாகியுள்ளது. அங்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் அவர் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் போட்டி மற்றும் அதற்கடுத்த 2-வது போட்டி என இந்த இரண்டு போட்டிகளில் தவற விடுவார்.

Rohith

மேலும் அவரால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் அந்த போட்டிகள் ஜனவரி 7ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி ஆகிய 2 போட்டிகளில் விளையாடுவார் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement