உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கோலி – ரோகித் இடையே ஏற்பட்ட பிளவு குறித்து தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

தனது மனைவியை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி விதிமுறைகளை மீறி 7 வாரமும் தன்னோடு உலக கோப்பை தொடர் முழுவதும் ரோஹித் தங்க வைத்தார். இந்த விவகாரம் பெரிதாக கோலி மற்றும் ரோஹித்துக்கு இடையே பணி போர் ஆரம்பித்தது. அதன் பிறகு கேப்டன்சி பிரச்சினையாலும் இருவருக்குள் பெரிய பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது ரோகித் ஆதரவாக சில வீரர்களும், கோலி ஆதரவாக சிலரும் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மீண்டும் 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து கோலி ரோஹித் பிரச்சனை தற்போது மீண்டும் முற்றி உள்ளது. இதனால் இந்த நிலையை தவிர்த்து இந்திய அணியை சுமூகப்படுத்த பிசிசிஐயின் ceo இன்று அமெரிக்கா செல்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு முன் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் ஆகியோரை தனியாக அழைத்து ஒரு மீட்டிங் வைக்கப் போவதாகவும், அந்த மீட்டிங்கில் இருவரையும் சமாதானம் செய்வதும் கூறப்படுகிறது. அந்த மீட்டிங்கில் ரவிசாஸ்திரியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



