இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தற்போது முதலிடத்தில் இடத்தில் உள்ளது இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆன்டிகுவாவில் முதல் போட்டி துவங்க உள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இனிவரும் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை நிற சீருடையுடன் பெயர் மற்றும் எண்களை பதித்து ஆடலாம் இது ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பயன்படுத்த உள்ளன. அதே போன்று இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பெயர் மற்றும் எண் கொண்ட ஜெர்ஸி களை அணிந்து விளையாட உள்ளது.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் 7 ஆம் நம்பர் எண் தற்போது காலியாக உள்ளது. ஆனால் தோனியின் சாதனைகள் மற்றும் இந்திய அணிக்கு அவர் ஆற்றிய சாதனைகள் காரணமாக எண் 7 யாரும் அணியக் கூடாது. அது தோனியின் நினைவாக அப்படியே இருக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் ஒருநாள் மற்றும் டி20 எந்த எண்ணை பயன்படுத்தினார்களோ அதே எண்ணை பயன்படுத்துவார்கள். மேலும் சச்சின் டெண்டுல்கர் உடைய 10 மற்றும் தோனி உடைய 7 ஆகிய எண்கள் பயன்படுத்தக் கூடாது. அது அவர்களுக்கான மரியாதை என்று பிசிசிஐ தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



