பிசிசிஐ விருதுகள் 2024: சச்சின், அஸ்வின், பும்ரா, மந்தனாவுக்கு ஸ்பெஷல் விருதுகள்.. வெளியான அறிவிப்பு

Ashwin 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2024 காலண்டர் வருடத்தில் சிறந்து விளங்கிய வீரர்கள் வீராங்கனைகளுக்கு ஐசிசி சமீபத்தில் விருதுகளை அறிவித்த கௌரவித்தது. அதே போல பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த வருடம் சிறந்த செயல்பாடுகளை தங்களது வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்க உள்ளது. அதன் படி முதலாவதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்காக அவர் ஆற்றிய பங்கும் செய்த சாதனைகளும் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன் காரணமாக சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அஜித் வடேகர், திலிப் சர்க்கார், ரவி சாஸ்திரி போன்ற நட்சத்திரங்களுக்குப் பின் அந்த உயரிய விருதை சச்சின் டெண்டுல்கர் பெற உள்ளார். அடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

சச்சின், அஸ்வின்:

முத்தையா முரளிதரனுக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்று சாதனை படைத்த அவர் 765 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதனால் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து வரலாறு படைத்த அஸ்வின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். தற்போது 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றுள்ள அவருக்கு சிறப்பு விருதை அறிவிக்கவுள்ளது.

2024ஆம் ஆண்டில் ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தனி ஒருவனாக வெற்றிக்கு போராடினார். அதனால் 2024 சிறந்த சர்வதேச வீரர் என்ற ஐசிசி விருதை வென்று அவருக்கு தற்போது பிசிசிஐ பாலி உம்ரிகர் விருதை வழங்கவுள்ளது.

- Advertisement -

மங்கை மந்தனா:

இது கடந்த வருடம் சிறந்து விளங்கிய இந்திய வீரருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். அதே போல மகளிர் கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா கடந்த வருடம் மிகவும் சிறப்பாக விளையாட இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் அவருக்கு 2024 சிறந்த சர்வதேச மகளிர் வீராங்கனை என்ற விருதை பிசிசிஐ தரவுள்ளது.

இதையும் படிங்க: 15 ரன்ஸ்.. 17க்கு 17.. 10 வருடம்.. ஹரி ப்ரூக்கை மடக்கிய தமிழகத்தின் வருண்.. இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இது போக டானுஷ் கோட்டியான், சசாங் சிங், அக்சய் டோட்ரே ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எனவே அவர்களுக்கும் பிசிசிஐ வழங்க உள்ளது. இந்த விருதுகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி மும்பையில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement