இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனுடன் கைகுலுக்கிய கோலி..! பிசிசிஐ அறிவித்த விருது..!

- Advertisement -

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி குறிகிய காலகட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவரின் புகழை பறைசாற்றும் வகையில் பி சி சி ஐ விராட் கோலிக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

Virat-Kohli

சமீபத்தில் பி சி சி ஐ 2017-2018 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளது. அதில் சிறந்த கிரிக்கெட் வீரராக வீராட் கோலி தேர்வுசெய்ப்பட்டு ‘பாலி உல்மீகர் விருது ‘ வழங்கப்பட்டது. இந்த விருதை 4 வது முறையாக கோலி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும், முதன் முறையாக இந்த ஆண்டு முதல், இந்த விருது பட்டியலில் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளையும் சேர்த்துள்ளது பி சி சி ஐ நிர்வாகம். வரும் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழாவில், இந்திய மகளீர் கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடியதற்காக சிறந்த வீராங்கனை என்ற விருதையும் வழங்க இருக்கிறது.

Harmanpreet

பெண் வீராங்கனைகளில் 2016-17 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை விருதை ஹர்மன்ப்ரீத் கௌரும், 2017-18 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை என்ற விருதை ஸ்ம்ரிதிமந்தன வென்றுள்ளனர். இந்த பட்டியலில் பல விருதுகளை பெற்ற வீரர் , வீராங்கனைகளில் பட்டியல் பின்வருமாறு.

Awarded

* விராட் கோலி – சிறந்த சர்வேதேச கிரிக்கெட் வீரர்
* ஸ்ம்ரிதிமந்தன – சிறந்த சர்வேதேச கிரிக்கெட் வீராங்கனை
* புத்தி குந்திரன் – பி சி சி ஐ சிறப்பு விருது
* அனுஸுமன் ஜீக்வாட் – பி சி சி ஐ வாழ்நாள் சாதனையாளர் விருது
* சுதா ஷா – பி சி சி ஐ பெண் வாழ்நாள் சாதனையாளர் விருது
* மயங்க் அகர்வால் – ரஞ்சி கோப்பையில் அதிக ரன் குவித்த வீரருக்கான விருது

Advertisement