நீங்க ரஞ்சி போட்டியில் ஆட வேண்டாம். நியூஸிலாந்து சென்று நேர டீம்ல ஆடுங்க – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ் அறிவிப்பு

Saha-3
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே நியூசிலாந்து புறப்பட்டு சென்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை மறுதினம் 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

Saha 1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் அடுத்த மாதம் 21 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் டெஸ்ட் தொடருக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த தொடருக்கான அணியில் விக்கெட் கீப்பராக சஹா விளையாட இருக்கிறார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஹா வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கைவிரலில் காயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார். தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட அவர் ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்கு எதிராக பெங்கால் அணிக்காக விளையாட திட்டமிட்டிருந்தார். ஆனால் பிசிசிஐ அவரை ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டாம் என்றும் அடுத்த மாதம் துவங்க உள்ள டெஸ்ட் போட்டிக்காக தயாராகும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

saha 2

ஏனெனில் நியூசிலாந்து தொடர் வரைக்கும் உடற் தகுதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவே பிசிசிஐ அவரிடம் இந்த வேண்டுகோளை வைத்துள்ளது. ஏற்கனவே டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடிய இஷாந்த் சர்மா போட்டியின்போது காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம் ஆக இருப்பதால் அது போன்ற காயத்தை தவிர்க்க ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டாம் என்றும் நேரடியாக நியூசிலாந்து சென்று விளையாட பிசிசிஐ சஹாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement