இங்கிலாந்திற்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்தியா அணி அறிவிப்பு..!

team-india
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியடைந்துள்ளது இந்திய அணி. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. தற்போது இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக செயல்பட்ட கோலி டெஸ்ட் தொடரையும் வழிநடத்த உள்ளார். துணை கேப்டனாக அஜின்கியா ரஹானே செயல்படவுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களின் விவரம்

- Advertisement -

*விராட் கோலி
*ஷிகர் தவான்
*கே எல் ராகுல்
*முரளி விஜய்
*சடீஸ்வர் புஜாரா
*அஜின்கியா ரஹானே
*கருண் நாயர்
*தினேஷ் கார்த்திக்
*ரிஷப் பண்ட்
*அஸ்வின்
*ஜடேஜா
*குல்தீப் யாதவ்
*ஹார்திக் பாண்டியா
*இஷாந்த் ஷர்மா
*மொஹமத் சமி
*உமேஷ் யாதவ்
*ஜஸ்பிரிட் பும்ரா
*ஷர்துள் தாகூர்


போன்றவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த டெஸ்ட் அணியில் ஆச்சர்யமூட்டும் விதமாக பல மாற்றங்களை இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் செய்துள்ளனர். அதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த விர்த்திமான் சாஹா அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் மோசமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் டெஸ்ட் அணியில் இடம்பெறுவது சந்தேகமியுள்ளது.

Advertisement