ஆஸ்திரேலிய செல்லும் இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு. முக்கிய வீரருக்கு இடமில்லை – அணி வீரர்களின் லிஸ்ட் இதோ

Ind-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்தவுடன் நேராக இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்ற விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் இரண்டு மாத காலத்திற்கு பெரிய தொடராக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டது. இந்த அணியில் காயம் காரணமாக தற்போது விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னணி தவக்கவீரர் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை.

கேப்டனாக கோலியும்யும், துணை கேப்டனாக ரஹானேவும் தொடர்கின்றனர். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் சகா ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதுதான் :

1) கோலி 2)அகர்வால் 3) ப்ரித்வி ஷா 4) கே.எல் ராகுல் 5) புஜாரா 6)ரஹானே 7) விஹாரி 8) கில் 9) சஹா 10) பண்ட் 11) பும்ரா 12) ஷமி 13) உமேஷ் யாதவ் 14) சைனி 15) குல்தீப் யாதவ் 16) ஜடேஜா 17) அஷ்வின் 18) சிராஜ்

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை அடிலெய்ட் மைதானத்தில், இரண்டாவது டெஸ்ட் போட்டி 26 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை மெல்போர்ன் மைதானத்தில், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி ஏழாம் தேதி முதல் 16ம் தேதி வரை சிட்னி மைதானத்தில், நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்திலும் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.

Rohith

இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் துவக்க வீரர் ரோஹித் சர்மா மட்டுமின்றி முன்னணி வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மாவும் காயம் காரணமாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement