இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக நாளை (டிசம்பர் 26) துவங்க உள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற மோசமான தோல்விக்கு காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திகழ்ந்தனர். அதனால் நாளை துவங்கவுள்ள இரண்டாவது போட்டியில் பேட்டிங் வரிசையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தற்போது 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
அந்த வகையில் இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக சிராஜ் விளையாடப் போகிறார் என்பதையும் இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் சிராஜ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். அதுமட்டுமின்றி முக்கிய மாற்றமாக விராட் கோலியின் இடத்தில் ஆல் ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ALERT🚨: #TeamIndia for 2nd Test of the Border-Gavaskar Trophy against Australia to be played in MCG from tomorrow announced. #AUSvIND pic.twitter.com/4g1q3DJmm7
— BCCI (@BCCI) December 25, 2020
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இதோ :
1) ரஹானே, 2) அகர்வால், 3) கில், 4) புஜாரா, 5) விஹாரி, 6) பண்ட், 7) ஜடேஜா, 8) அஷ்வின், 9) பும்ரா, 10) உமேஷ் யாதவ், 11) சிராஜ்



