ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் அணியை அறிவித்த பி.சி.சி.ஐ – முக்கிய துவக்க வீரருக்கு இடமில்லை

Ind
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்தவுடன் நேராக இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்ற விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் இரண்டு மாத காலத்திற்கு பெரிய தொடராக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டது. இந்த அணியில் காயம் காரணமாக தற்போது விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னணி தவக்கவீரர் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை.

ஆஸ்திரேலிய தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணி இதோ :

1) கோலி 2) தவான் 3) கில் 4) கே.எல் ராகுல் 5) ஷ்ரேயாஸ் ஐயர் 6) மனீஷ் பாண்டே 7) ஹார்டிக் பாண்டியா 8) அகர்வால் 9) ஜடேஜா 10) சாஹல் 11) குல்தீப் யாதவ் 12) பும்ரா 13) ஷமி 14) சைனி 15) ஷர்துல் தாகூர்

இந்திய அணி 27 மற்றும் 29ம் தேதிகளில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை சிட்னி மைதானத்தில் டிசம்பர் ஒன்றாம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியை கான்பரா மைதானத்திலும் விளையாடப் போவது குறிப்பிடத்தக்கது.

Advertisement