ரவி சாஸ்திரி பதவிக்காலம் முடிந்தது. புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கவுள்ள பி.சி.சி.ஐ – இவருக்குத்தான் வாய்ப்பு அதிகம்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு கும்ப்ளே விலகியதை அடுத்து இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆனார். அதன்பிறகு தற்போது நடப்பு உலகக் கோப்பை வரை இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வந்த அவர் மீண்டும் 45 நாட்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை பயிற்சியாளராக இருக்க பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

Ravi

- Advertisement -

மேற்க்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரோடு அவரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான முடிவினை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கிறார். பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் தற்போது அனைவருக்கும் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Ravi

இதில் ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியமே நேரடியாக கேட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளராக நிறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மற்றபடி பவுலிங், பீல்டிங் மற்றும் பேட்டிங் ஆகியவற்றுக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement