ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இந்திய அணியின் துணைக்கேப்டனான இளம்வீரர் – அடுத்த கேப்டன் இவர்தானா ?

IND-2

இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் ஐபிஎல் தொடரை முடித்த கையோடு அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு விடுவார்கள். மேலும் ஆஸ்திரேலிய செல்லும் இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் ஆஸ்திரேலியாவில் 14 தனிமைப்படுத்த படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

INDvsAUS

ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஒரு மிக நீண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான அணியும் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் ஆஸ்தான துவக்க வீரராக இருக்கும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவிலை இதன் காரணமாக அவருக்கு பதிலாக இளம் வீரரான ராகுலுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Rahul

ஏற்கனவே இந்திய அணியில் கோலிக்கு அடுத்து ராகுல்தான் கேப்டன் எனக் கூறிவரும் நிலையில் தற்போது துணை கேப்டன் பதவியை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக உள்ளதால் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

rohith 1

அதுமட்டுமின்றி கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள ரோஹித் இந்த தொடரில் இடம்பெறாதது குறித்த சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. ஆனால் நேற்று ரோஹித் வலைப்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.