ஐ.பி.எல் 2022 : அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் – அதில் ஒரு அணி இதுதான்

ipl trophy

ஐபிஎல் லீக் தொடரில் தற்பொழுது வரை 8 அணிகள் ஆடி வருகின்றனர்.மும்பை இந்தியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ். இந்த 8 அணிகளும் தான் தற்பொழுது ஐபிஎல் லீக் தொடரில் பங்கேற்ற ஆடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு 15 ஆவது சீசனுக்காக மேலும் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Ipl cup

இந்நிலையில் அந்த இரண்டு அணிகளும் ஒரு அணி அகமதாபாத் என்று தெரியவந்துள்ளது.ஏனெனில் அகமதாபாத்தில் தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆன நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. எனவே அகமதாபாத் ஒரு அணியாக நிச்சயம் இருக்கும் என நம்பலாம். இன்னொரு அணி எது என்பது குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை.
எனினும் புதிய அணி ஐபிஎல் லீக் தொடரில் சேர்க்கப்படும் விதம் டெண்டர் முறையில் நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்பும் அணி , அணியின் தொகையை டெண்டரில் பதிவு செய்ய வேண்டும். அதிக தொகையை கொண்ட அணிக்கே ஐபிஎல் லீக் தொடரில் ஆட முன்னுரிமை வழங்கப்படும்.
ஏனெனில் ஐபிஎல் லீக் தொடர் என்பது தற்போது உலக அளவில் ஒப்பிட்டு பார்த்தால் மிகப்பெரிய பணம் புழங்கும் லீக் தொடர் ஆகும்.

IPL-1

இதில் பங்கேற்கும் அணியின் உரிமையாளர்கள் போட்டிகளின் மூலம் மிக அதிக தொகையை ஈட்டி வருகிறார்கள்.எனவே பங்கேற்க விரும்பும் புதிய அணி அதிக தொகையை டெண்டரில் பதிவு செய்ய வேண்டும் , பணத்திற்கே இங்கு முன்னுரிமை ஆகும். இந்நிலையில் புதிய இரு அணிகள் தேர்வு செய்தவுடன் மே மாதத்தில் இவ்விரு அணிகளுக்கான ஏலம் பிசிசிஐ தலைமையில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ தரப்பில் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Ganguly

ஏலத்தில் இவ்விரு அணிகளும் தங்களது அணிக்கு ஏற்ற வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ஏலம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் இந்திய கிரிக்கெட் செகரட்டரி ஜெய் ஷாவின் கண்காணிப்பில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.