இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய பிளேயிங் லெவனை அறிவித்த பி.சி.சி.ஐ – பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இன்று மதியம் இந்திய நேரப்படி மாலை 3.30 க்கு போட்டி துவங்குகிறது. ஐ.சி.சி. முதன்முறையாக நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இது என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொள்ளும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

INDvsNZ

இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே 3ஆம் தேதி இங்கிலாந்து சென்று இருந்த நிலையில் சில நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு அவர்களுக்குள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடினர். இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியல் வெளியானது.

- Advertisement -

அப்போதிலிருந்து இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் பிளெயிங் லெவனை பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ind

இந்த இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி விளையாடுகிறது. அதேபோன்று 3 வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஷமி, இசாந்த் சர்மா ஆகியோர் விளையாடுகின்றனர். இதன் காரணமாக சிராஜ்க்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோன்று மிடில் ஆர்டரில் விஹாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) பும்ரா, 10) இஷாந்த் சர்மா, 11) முகமது ஷமி

Advertisement