இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

INDvsENG

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த நீண்ட தொடரில் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியும் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

IND-1

இதனைத் தொடர்ந்து இந்திய அணி கலந்துகொள்ளும் அடுத்த தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நான்கு டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர் .அது தவிர இஷாந்த் ஷர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இவர்களைத் தவிர ஆஸ்திரேலிய தொடரில் அசத்தலாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர நெட் பவுலர்களாக 5 வீரர்களையும், ஸ்டாண்ட் பை வீரர்களாக ஐந்து வீரர்களையும் பிசிசிஐ தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

- Advertisement -

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பல மாதங்களாகவே கிரிக்கெட் தொடர் எதுவும் நடத்தப்படாமல் இருந்து வருகையில் தற்போது முன்னெச்சரிக்கையாக மைதானத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெறும் என்ற ஒரு தகவலும் பிசிசிஐ சார்பில் வெளியாகி உள்ளது. அதனால் சென்னை டெஸ்ட் போட்டியிலும் கூட வீரர்கள் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் விளையாடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.