இலங்கை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு. கேப்டன் யார் ? – முழு லிஸ்ட் இதோ

Sl

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜூலை 13ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணியின் முதன்மை வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகின்றனர்.

IND

அதனால் இந்த இலங்கை தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடும் என பிசிசிஐ சார்பில் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து இந்த இலங்கை தொடரில் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பிடிக்க போகின்றனர் ? யார் கேப்டனாக செயல்படுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இலங்கை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரைத் தொடர்ந்து துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Dhawan 1

மேலும் நேற்று இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் சில இளம் வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அணி நிச்சயம் இலங்கை அணியை வீழ்த்தும் அளவிற்கு பலமான அணியாக பார்க்கப்படுகிறது. இலங்கை தொடருக்கான இந்திய அணி முழு லிஸ்ட் இதோ :

- Advertisement -

தவான், புவனேஷ்வர் குமார், பிரித்வி ஷா,தேவ்தத் படிக்கல்,சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நித்தீஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்ப கெளதம், வருண் சக்கரவர்த்தி, சைனி, க்ருனால் பாண்டியா, ராகுல் சாகர், தீபக் சாகர், சேத்தன் சக்காரியா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல்

Advertisement