இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை இவர்கள்தான் தேர்வு செய்ய போகிறார்கள் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருக்கு 45 நாட்கள் மேலும் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

Ravi

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இந்தப் பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே, டாம் மூடி மற்றும் 2011 கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி க்ரிஸ்டன் போன்ற பலர் விண்ணப்பிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் ரவிசாஸ்திரி நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளரை யார் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற தேர்வு குழு தகவல் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பயிற்சியாளரை கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழு தான் தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோரை கொண்ட ஆலோசனைக் கமிட்டி தான் பயிற்சியாளர் தேர்வு செய்து வாரியத்திற்கு பரிந்துரை செய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு குழுவினரின் முடிவும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் புதிய பயிற்சியாளர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement