- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் இஸ் பேக்.. வருண் உட்பட 2 தமிழருக்கு இடம்.. பிசிசிஐ இந்திய அணியின் 2025 சம்பள ஒப்பந்தம் இதோ

இந்திய கிரிக்கெட் ஆடவர் அணிக்கான 2024 – 25 மத்திய சம்பள ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 7 கோடியை சம்பளமாக கொடுக்கும் ஏ ப்ளஸ் பிரிவில் ஜாம்பவான் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஏ ப்ளஸ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

அடுத்ததாக கிரேட் ஏ பிரிவில் மொத்தம் 6 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 5 கோடியை ரூபாய் வருடாந்திர சம்பளமாக கொடுக்கப்படும் இந்த பிரிவில் நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகமது சிராஜ், ஷமி ஆகிய பவுலர்களுடன் கேஎல் ராகுல் மற்றும் இளம் வீரர் சுப்மன் கில் ஏ பிரிவுக்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

பிசிசிஐ சம்பள ஒப்பந்தம்:

3 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளத்தைக் கொடுக்கும் கிரேட் பி பிரிவில் சூரியகுமார் யாதவ், அக்சர் பட்டேல், இளம் வீரர் ஜெய்ஷ்வால், குல்தீப் யாதவ் ஆகியோருடன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் அவர் மத்திய ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின் உள்ளூரில் விளையாடிய அவர் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா கேப்டனாக வெல்ல உதவினார்.

அதன் காரணமாக இந்திய அணிகள் மீண்டும் கம்பேக் கொடுத்த ஸ்ரேயாஸ் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அதனால் தற்போது அவரை மீண்டும் பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. அதே போல இளம் வீரர் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக அசத்தி வருவதால் பி பிரிவுக்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

பிசிசிஐ அறிவிப்பு:

வருடாந்திர சம்பளமாக ரூபாய் ஒரு கோடியை பெறும் குரூப் சி பிரிவில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2021இல் அறிமுகமாகி தடுமாற்றமாக விளையாடிய அவர் சமீபத்தில் கம்பேக் கொடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல உதவினார். அதனால் அவருக்கு தற்போது பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்தில் முதல் முறையாக இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: தவான், கோலி, வார்னர் ஆகியோரது சாதனையை சமன் செய்த ஹிட்மேன்.. சி.எஸ்.கே அணிக்கெதிராக – தரமான சம்பவம்

அவருடன் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஸ் ரெட்டி, டி20 தொடர்களில் அசத்திய திலக் வர்மா, ரிங்கு சிங், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் ஆகியோர் கிரேட் சி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், ரஜத் படிதார், சிவம் துபே, துருவ் ஜுரேல், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் கடந்த முறை நீக்கப்பட்ட இஷான் கிசான் மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார்.

- Advertisement -