இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.
தொடருக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விலகியுள்ளார். மேலும் அவர் பெங்களூரு கிரிக்கெட் தேசிய அகாடமியில் காயம் குணமாகும் வரை மருத்துவ குழு கண்காணிப்பில் இருப்பார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தியில் பும்ராவின் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிறிய காயம் காரணமாக இந்த தொடரில் விலகியுள்ளார். மேலும் அவரது காயம் குணமடையும் வரை பி.சி.சி.ஐ யின் மருத்துவக்குழு கண்காணிப்பில் அவர் தொடர்ந்து இருப்பார் காயம் குணமடைந்து பிறகு மீண்டும் அணியில் இணைவார் என்று தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடந்த தொடரில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் ஹாட்ரிக் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.