தோனியுடன் இருந்த உறவை முறித்துக்கொண்ட பி.சி.சி.ஐ – ரசிகர்கள் அதிர்ச்சி

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ வருடம்தோறும் இந்திய அணி வீரர்களுக்கான சம்பளம் குறித்த ஒப்பந்த பட்டியலை வெளியிடும். அதன்படி இந்த வருடத்திற்கான (அக்டோபர் 2019 – செப்டம்பர் 2020) சம்பளப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள ஊழல் வீரர்களுக்கு 7 கோடி, ஏ கிரேட் வீரர்களுக்கு 5 கோடி, பி கிரேட் வீரர்களுக்கு 3 கோடி, சி கிரேட் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு கோடி என்று சம்பள அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஏ ப்ளஸ் பட்டியலில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏ பிரிவில் அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, கே எல் ராகுல், ஷிகர் தவான், இசாந்த் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் உமேஷ் யாதவ், பாண்டியா, அகர்வால், சாஹல் மற்றும் சஹா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சி பிரிவில் கேதார் ஜாதவ், சைனி, தீபக் சாஹர், மனிஷ் பாண்டே, விகாரி, ஷர்துல் தாகூர் மற்றும் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Dhoni-1

இந்த பட்டியலில் எந்த ஒரு பிரிவிலும் தோனியின் பெயரை பிசிசிஐ இணைக்கவில்லை. இதனால் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை பிசிசிஐ எழுத்துமுறையில் முடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்த பட்டியல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பிசிசிஐ மீது தங்களது ஆதங்கத்தையும், அதிர்ச்சியும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -