ஷமி கைது நடவடிக்கையில் நடக்கவுள்ள முக்கிய திருப்பம் – விவரம் இதோ

Shami

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி அசின் ஜஹான் வரதட்சணை மற்றும் பல பெண்களுடன் தொடர்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்தவருடம் தொடர்ந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு உறுதிப்படுத்தும் வகையில் கொல்கத்தா காவல் நிலையத்திலும் தனது கணவர் மீது அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.

Shami 2

இந்த குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்து இருந்தாலும் அதன்பிறகு இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அலிப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஷமி மற்றும் அவரது சகோதரருக்கு பிடிவாரன்ட் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி 15 நாட்களுக்குள் ஷமி நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பிடிவாரண்ட் ஆணைக்கு அலிப்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ராய் இடைக் கால தடை விதித்துள்ளார். இதுதொடர்பாக ஷமியின் வழக்கறிஞர் சலீம் ரகுமான் கூறியதாவது : ஷமி மீதான பிடிவாரண்ட் அதற்கு அலிப்பூர் நீதிமன்றம் இரண்டு மாத கால அளவிற்கு தடை பிறப்பித்துள்ளது.

Shami 1

மேலும் இந்த வழக்கை நவம்பர் மாதம் விசாரணை செய்யவும், இரண்டாம் தேதி அன்று இந்த குற்ற விசாரணை நடைபெறும் என்றும் ஷமியின் வழக்கறிஞர் கூறினார். எனவே தற்போது ஷமி மீதான இந்த வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டதால் இந்த இரண்டு மாதங்களுக்குள் ஷமி தன் மீது விழும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சேகரிக்க உள்ளார். எனவே இந்த சமயம் பிசிசிஐ இதுகுறித்து எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்காது என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.