ஒருவழியாக இந்திய அணி விளையாடும் தொடருக்கு பச்சைக்கொடி காட்டிய பி.சி.சி.ஐ – அதிகாரபூர்வ அறிவிப்பு

BCCI
- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்னர் இந்திய அணி இலங்கை சென்று மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அந்த போட்டிகள் அனைத்தும் முடிவு தெரியாமல் தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் வைரஸ் தாக்கம் கம்மியாக இருப்பதன் காரணமாக பிசிசிஐக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியிருந்தது.

Ind

- Advertisement -

எப்படிப்பார்த்தாலும் வீரர்கள் தயாராவதற்கு 8 முதல் 12 வாரங்கள் தேவைப்படும். இந்நிலையில் பிசிசிஐ அதுகுறித்து தற்போது தனது பதிலை தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே முன்னர் தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடரை ன்னும் இரு மாதங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் நடத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஒருவேளை இந்த தொடர் நடக்கும் பட்சத்தில் மைதானத்தில் 30 சதவீத அளவிற்கு ரசிகர்களை அனுமதிக்கலாம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இப்படி குறைவாக அனுமதிப்பத்தின் மூலம் ரசிகர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி கடைபிடிக்கலாம் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டம் தீட்டி வருகிறது.

ind vs sl

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று அடுத்த மாதம் எட்டாம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்து விட்டால் கொரோனா வைரஸ் இடையே நடக்கும் இரண்டாவது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை தொடர் அமையும்.

IND-2

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 3 மாதங்களாக எந்தவொரு சர்வதேச தொடரும் நடத்தப்படாமல் கிரிக்கெட் வாரியங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் இவ்வேளையில் ஒவ்வொரு நாட்டு நிர்வாகங்களும் படிப்படியாக போட்டிகளை நடத்த முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement