வீரர்கள் மனைவிக்கு தடை.! BCCI அதிரடி தீர்ப்பு.! வருத்தத்தில் கிரிக்கெட் வீர்கள்..!

India

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கிவுள்ளது. இந்த தொடருக்கு முன்னாள் இரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் வரும் ஜூலை 25 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் மூன்று போட்டிகள் முடியும் வரை இந்திய வீரர்கள் தங்களது குடும்பத்தானிருடன் தங்க கூடாது என்று பிசிசிஐ புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

Kohli

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான டெஸ்ட் தொடராக கருதப்படுகிறது. இந்திய அணி 1932 ஆம் ஆம் ஆண்டு இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. அதன் பின்னர் பல இந்திய கேப்டன்கள் சார்பில் இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது.

அதே போல வடேகர்(1971), கபில் தேவ் (1981), டிராவிட்(2007) ஆகியோர் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலும், 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலும் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற தொடரில் இந்திய அணி வெற்றி பெறவில்லை.

BCCI

எனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடர் மிக முக்கியமான தொடராக கருதப்படுவதால், வீரர்கள் இந்த போட்டியில் இருந்து கவன சிதறல் ஏற்படாமால் இருக்க இந்த மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை கிரிக்கெட் வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய கட்டுப்பாடு வீரர்களுக்கு சாதகமா இல்லை பாதகமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.