இவரையா மறுபடியும் சேத்தீங்க ? ஆஸ்திரேலிய தொடருக்கான வர்ணனை பட்டியலில் இணைந்த சர்ச்சை நாயகன் – ரசிகர்கள் எதிர்ப்பு

Sanjay
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரராக இருந்தவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கங்குலியின் காலகட்டத்தில் 37 டெஸ்ட் போட்டிகளிலும், 74 ஒருநாள் போட்டிகளில் மாறி 4000 ரன்கள் அடித்து இருக்கிறார். கடைசியாக 1996 ஆம் ஆண்டு தனது சர்வதேச போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் இந்தியா விளையாடும் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

dhoni-manjrekar

- Advertisement -

இவரது வர்ணனை காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறார் சர்வதேச வீரர்களை வைத்து வன்மமாக பல கமெண்ட்டுகளை கொடுத்திருக்கிறார். உலக கோப்பை தொடரின் போது ரவீந்திர ஜடேஜாவை பார்த்து துண்டு துக்கடா வீரர் என்று கூறியிருந்தார். இதன் பின்னர் கடுப்பான ரவீந்திர ஜடேஜா உடனடியாக அந்த மைதானத்திலேயே அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். பதிலடி கொடுத்து விட்டு, அது போதாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தில் புகாரும் கொடுத்தார்.

அதுமட்டுமின்றி ஐ.பி.எல் தொடரின் போது மும்பை அணிக்கு சார்பாக மட்டுமே ஒருதலை பட்சமாக வர்ணனை செய்தார். இதுபோன்ற தொடர் புகாரை வைத்து பிசிசிஐ சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியது.

Sanjay

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக வர்ணனை செய்ய முடியாமல் இருந்தார். ஐபிஎல் தொடரின்போது தனது செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அதையும் மீறி பி.சி.சி.ஐ நிர்வாகத்திடம் தன் செயலுக்கு மன்னிப்பும் கேட்டார். இருந்தாலும் பிசிசிஐ மனம் இறங்கி வரவில்லை. அவரை வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரின் போது இவருக்கு வர்ணனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Sanjay

பிசிசிஐ ஒருமனதாக இவரை மீண்டும் வர்ணனை குழுவில் சேர்த்தாலும் பல ரசிகர்களுக்கு இவரை மீண்டும் அப்படி அந்த இடத்தில் வைக்க கூடாது என்றுதான் சமூகவலைதளத்தில் பேசிவருகின்றனர். தொடர்ந்து தனது சக வர்ணனையாளர்களிடம் வன்மையாக பேசி வரும் இவரை மீண்டும் அந்த குழுவில் சேர்க்க வேண்டாம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement