தினேஷ் கார்த்திக்கின் கதையை முடித்து வைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Karthik
- Advertisement -

வெஸ்ட் இண்டீசில் தற்போது நடைபெற்று வரும் கரீபியன் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அமர்ந்திருந்தார். அவருடன் மெக்கல்லம் அமர்ந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

karthik

- Advertisement -

அதனால் இந்திய அணியின் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு தொடரில் அவர்களுடைய ஜெர்சியில் அமர்ந்திருந்த தினேஷ் கார்த்திக்கை பிசிசிஐ வன்மையாக கண்டித்தது. மேலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பி.சி.சி.ஐ தயாரானது.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் பிசிசிஐ-யிடம் தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் மெக்கல்லம் அழைத்ததால் நான் அங்கு சென்றேன் என்றும் அவர் நான் விளையாடும் கொல்கத்தா அணி பயிற்சியாளர் என்பதால் அவருடைய அழைப்பின் பேரில் விருந்தினர் ஆகவே அங்கு சென்று என்று விளக்கமும் அளித்தார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்த விளக்கத்தை பிசிசிஐ தற்போது ஏற்றுக்கொண்டு இது தொடர்பாக குறிப்பிட்ட செய்திகள் : கார்த்திக்கின் மன்னிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய செயல் பெரிய தவறு இல்லை. அவருடைய தனிப்பட்ட வேலை காரணமாக அங்கு சென்று உள்ளதால் இது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. தினேஷ் கார்த்திக் மீது எந்த தவறும் இல்லை என்று அவர் மன்னிப்பை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement