ஸ்மித் மற்றும் வார்னருக்கு டீ20 போட்டியில் விளையாட தடை..! – இதுதான் காரணம்..?

warner
- Advertisement -

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓராண்டு காலம் தடை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு, தற்போது மற்றுமொரு தலைவலியாக ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் பிக் பாஷ் தொடரிலும் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
Smith
கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் ஆகியோர் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனால் இவர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்மித் மற்றும் வார்ணர் ஆகியோருக்கு சலுகை வழங்கி உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஓராண்டு
தடையில் இருக்கும் இவர்கள் இருவரும் சமீபத்தில் கனடா நாட்டில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாடினார்கள்.
warner
இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பிக் பாஷ் தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் சேர்க்கப்படமாட்டார்கள் என்று பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தலைவர் கிம் மெக்கோனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “ஸ்மித் மற்றும் வார்னேருக்கு ஆஸ்திரேலியா வாரியம் விதிக்கப்பட்டுள்ள தடை உள்ளூர் போட்டிகளுக்கும் பொருந்தும். இதனால் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க உள்ள பிக் பாஷ் தொடரில் சேர்க்கப்படமாட்டார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement