நான் சிறப்பாக விளையாடினாலும் என் நிறம் குறித்து பேசி என்னை நோகடிக்கிறார்கள் – தெ.ஆ வீரர் புலம்பல்

Bavuma-1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் மவீரரான 98 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பார்ப்பதற்கு குள்ளமாகவும் கருப்பாகவும் இருக்கிறார் என பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலாகப் பேசி வந்தனர்.

Bavuma

- Advertisement -

இந்நிலையில் அவர் மீதான இந்த விமர்சனத்திற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பவுமா கூறியதாவது : ஆமாம் நான் கருப்புதான் அது என் நிறம். ஆனால் நான் கிரிக்கெட் விளையாடுகிறேன் ஏனெனில் அதனை நான் காதலிக்கிறேன். நான் தென்ஆப்பிரிக்க அணியில் தொடர்ந்து நீடிப்பது என்னுடைய சிறப்பான ஆட்டத்தால் தான் நான் நினைக்கிறேன்.

நான் அணியில் இல்லாத போது என்னுடைய நிறத்தைக் காட்டி பலரும் பேசுவது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அணியில் நீடிப்பதற்கும், நீங்குவதும் உலகெங்கும் நடக்கும் ஒரு பொதுவான விஷயம் தான். ஆனால் நான் மட்டும் அணியில் இருந்து நீக்கப்படும் பொழுது வேறு யாரும் நீக்கப்படாது போலவும் செய்திகள் வருவது வேதனை அளிக்கின்றன. மேலும் என் நிறத்தை குறித்து அனைத்து செய்திகளும் வருகின்றன என்று பாவுமா கூறினார்.

Bavuma

பாவுமா கடந்த 4 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து வருகிறார். இங்கிலாந்து அணியுடன் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்டது அதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. 2016ஆம் ஆண்டு தன்னுடைய சர்வதேச டெஸ்ட் போட்டியை அறிமுகமான பாவுமா இதுவரை டெஸ்டில் ஒரு சதம் அடித்துள்ளார்.

காயம் காரணமாகவும், பார்ம் இல்லாததாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரில் அவரை தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கவில்லை. ஆனால் அவருக்கு வாய்ப்பு வரும்படி ஒருநாள் போட்டியில் அவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஒருநாள் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தன்னுடைய பேட்டிங்குக்கு காலிஸ் பெரிதும் உதவினார் என்று பாவுமா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement