வலை பயிற்சியில் இவர் சிறப்பாக ஆடுகிறார். நிச்சயம் இவர் தன்னை நிரூபிக்க முயற்சிப்பார் – இந்திய அணியின் பேட்டிங் கோச்

- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் வெறும் 223 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த போதிலும் இந்தியா 300 ரன்களைக் கூட தொட முடியாத காரணத்தால் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.

thakur 2

- Advertisement -

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை முதல் போட்டியில் வீழ்த்திய போதிலும் 2வது போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. இதனால் 1 – 1* என சமநிலையில் உள்ள இந்த தொடரை கைப்பற்ற நிச்சயம் வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் துவங்கிய 3வது போட்டியை சுமாரான பேட்டிங் காரணமாக இந்திய அணி மோசமாக துவக்கியுள்ளது இந்திய ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

மீண்டும் சொதப்பிய வீரர்:
இந்த முக்கியமான போட்டியில் கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் தவிக்கும் விராட் கோலி மிகவும் பொறுப்புடன் பேட்டிங் செய்து 79 ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார. அதேபோல் பார்ம் இல்லாமல் திண்டாடும் மற்றொரு அனுபவ வீரர் புஜாரா கூட பொறுப்பை உணர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து தன் பங்கிற்கு 43 ரன்கள் குவித்தார். ஆனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அஜிங்கிய ரஹானே மீண்டும் வெறும் 9 ரன்களுக்கு அவுட்டாக்கி இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தினார் என்றே கூறலாம்.

Rahane

இந்த தொடரின் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் இவர் 2வது போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் டக் அவுட் ஆன வேளையில் 2வது இன்னிங்ஸ்ஸில் தனது கிரிக்கெட் வாழ்க்கை பறிபோய்விடும் என்ற நிலையில் முக்கியமான 58 ரன்கள் அடித்து இந்திய அணியில் தனது இடத்தை காப்பாற்றிக் கொண்டார்.

- Advertisement -

மோசமான பார்ம்:
கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இவர் அதன்பின் சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஆனாலும் இவரின் அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகின்றனர்.

Rahane

இருப்பினும் அதை முழு வீச்சில் பயன்படுத்தத் தவறி வரும் இவருக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்படும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் “விக்ரம் ரத்தோர்” தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்,

- Advertisement -

“அவரை (ரகானே) பற்றிய புள்ளி விவரங்கள் பற்றி இன்னும் விவாதிக்கப்படவில்லை, தன்னால் முடிந்தவற்றை செய்யும் அவர் வலை பயிற்சியின் போது மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார், சொல்லப்போனால் இந்த தொடரில் அவர் தேவையான நேரத்தில் அவ்வப்போது பயனுள்ள இன்னிங்ஸ் ஆடியுள்ளார். ஒரு குறை என்னவெனில் சிறப்பாக இன்னிங்சை தொடங்கும் அவர் அதை பெரிய அளவில் மாற்ற முடியவில்லை, அதை செய்வதற்கு அவர் முயற்சித்து வருகிறார்” என தெரிவித்தார்.

Rahane

அவர் கூறுவது போல முதல் டெஸ்டில் 48 ரன்களும் 2வது போட்டியில் 58 ரன்கள் என முக்கியமான நேரத்தில் பயனுள்ள ரன்களை ரகானே அடித்தார் என்றாலும் அவரிடம் உள்ள அனுபவத்திற்கு அதைப் பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் தவிக்கிறார்.

- Advertisement -

மறுக்கப்படும் விஹாரி:
“இது போன்ற இன்னிங்ஸ்களில் ஒரு பெரிய ஸ்கோர் அடிப்பார் என அணி நிர்வாகம் நம்புகிறது, அவரின் இடத்தில் விளையாட தகுதியானவரை விட அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க அணி நிர்வாகம் விரும்புகிறது” என இது பற்றி மேலும் தெரிவித்த விக்ரம் ரத்தோர், வருடக்கணக்கில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தவிக்கும் ரகானேவுக்கு அவரின் அனுபவத்தை மீண்டும் கருத்தில் கொண்டு கடைசியாக மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறினார்.

Rahane 1

இருப்பினும் ரஹானேவுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பா? என இந்திய ரசிகர்கள் இது பற்றி சமூக வலைதளங்களில் வினவுகிறார்கள், ஏனெனில் அவரின் இடத்தில் விளையாட ஹனுமா விஹாரி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட நல்ல வீரர்கள் பல மாதங்களாக காத்துக் கிடக்கிறார்கள்.

குறிப்பாக இந்த தொடரின் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஹனுமா விஹாரி இக்கட்டான கடைசி நேரத்தில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 40* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார், அவர் அந்த ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் அந்த போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற இந்தியா 240 ரன்கள் இலக்கை நிர்ணயித்து வெற்றிக்காகப் போராடியிருக்க முடியாது. அதன் காரணமாக 3வது போட்டியில் ரகானே நீக்கப்பட்டு விஹாரிக்கு வாய்ப்பளிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், சிறப்பாக செயல்பட்ட போதிலும் காரணமே இல்லாமல் 3வது போட்டியில் அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement