பாகிஸ்தானுடன் இந்தியா மோதக் கூடாதுன்னு வேண்டிக்கிறேன்.. அந்த தோல்வி ரசிகர்களை பைத்தியமாக்கிடும்.. பசித் அலி

Basit Ali
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனைப் படைத்தது.

மேலும் 1991க்குப்பின் 34 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரை (2 – 1 என) வென்று வெஸ்ட் இண்டீஸ் சாதனைப் படைத்தது. மறுபுறம் சமீப காலங்களாகவே அமெரிக்கா, ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் ஐசிசி தொடர்களில் தோல்வியைச் சந்தித்தது. மேலும் 2024ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் முதல் முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் தோற்றது.

- Advertisement -

கடவுளிடம் வேண்டுகிறேன்:

அப்படி ஏற்கனவே திண்டாடி வரும் பாகிஸ்தான் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் அவமானத் தோல்வியைச் சந்தித்துள்ளது. அடுத்ததாக பாகிஸ்தான் 2025 ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் செப்டம்பர் 19ஆம் தேதி துபாயில் பரம எதிரி இந்திய அணியை பாகிஸ்தான் சந்திக்க உள்ளது.

இந்நிலையில் எல்லைப் பிரச்சனையை காரணமாக சொல்லி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விலக வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். ஏனெனில் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்துள்ளது. அப்படிப்பட்ட பாகிஸ்தான் வலுவான இந்திய அணியிடம் கண்டிப்பாக ஆசிய கோப்பை தோற்கும் என்று அவர் கணித்துள்ளார்.

- Advertisement -

பசித் அலி கவலை:

அப்படி தோற்றால் பாகிஸ்தானில் உள்ள ரசிகர்கள் பைத்தியமாகி விடுவார்கள் என்றும் பசித் அலி கூறியுள்ளார். இது பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் விளையாட மாட்டோம் என்று இந்தியா சொல்ல வேண்டுமென நான் வேண்டிக் கொள்கிறேன். குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற 2025 லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெளியேறியதைப் போல ஆசிய கோப்பையிலும் விலக வேண்டும்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் வேணுமா? அப்போ அந்த 3 பேரில் இருவரை தாங்க.. ராஜஸ்தான் அணி டிமாண்ட் – நோ சொன்ன சி.எஸ்.கே

“ஏனெனில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்தியா நம்மை மோசமாக தோற்கடிப்பார்கள். ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றால் நம்முடைய நாட்டில் யாரும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்தியாவுக்கு எதிராக நீங்கள் தோற்றால் அனைவரும் பைத்தியம் பிடித்தது போல ரியாக்சன் செய்வார்கள்” என்று கூறினார்.

Advertisement