கடைசில பாபர் அசாம் மாதிரி ஆகிட்டிங்களே.. ரோஹித், கோலி ஃபார்முக்கு வர இதை செய்யனும்.. பசித் அலி அட்வைஸ்

Basit Ali
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அந்த 3 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சொந்த மண்ணில் முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை பதிவு செய்துள்ளது.

அதே போல நியூசிலாந்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விகளுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சுமாராக பேட்டிங் செய்தது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

பாபர் அசாம் மாதிரி:

இந்நிலையில் பாபர் அசாம் போல கடைசியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் சுமாராக பேட்டிங் செய்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். மேலும் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா தொடருக்கு முன் அவர்கள் உள்ளூர் தொடரில் விளையாடுவதே ஃபார்முக்கு திரும்ப ஒரே வழி என்றும் பசித் அலி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“பாபர் அசாமுக்குப் பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். ரோகித் சர்மா முதல் 2 பந்துகளை தவற விட்ட போது மூன்றாவது கால் உயரத்துக்கு வந்தது. அதை அவர் இறங்கி சென்று பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இது அவருடைய கால்கள் சரியாக நகரவில்லை என்பதை காட்டுகிறது. அதற்கு காரணம் அவருடைய ஃபார்ம் நன்றாக இல்லை”

- Advertisement -

ஃபார்முக்கு திரும்ப:

“பின்னர் அவர் ரிவர்ஸ் ஸ்வீவ் ஷாட் வாயிலாக பவுண்டரி அடித்தார். விராட் கோலியும் ஃபார்மில் இல்லை. ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ரோஹித் சர்மாவும் உள்ளூரில் விளையாட வேண்டும். ஏனெனில் வெறும் பயிற்சிகள் மட்டும் போதாது. இந்தியாவுக்கு தேர்வாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தயாராக இருப்பது அவசியம் என்ற நிலைமை வரவேண்டும்”

இதையும் படிங்க: இதுதான் என்னோட கடைசி தொடர்.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த – விரிதிமான் சஹா

“சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கூட கடினமான நேரங்களில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சுதந்திரமாக விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். அதுவே அவர்கள் இப்படி சுமாராக விளையாடுவதற்கான காரணியாக அமைந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement