ரோஹித் அதைப் பற்றி பயப்படாம க்ளாஸை நிரூப்பிச்சுட்டாரு.. இங்கிலாந்துக்கு தோல்வியில்ல.. பசித் அலி பேட்டி

Basit Ali
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 0* என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. அதனால் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் இந்திய அணி காண்பித்துள்ளது. மேலும் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்து 119 (90) ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பியது இந்திய கிரிக்கெட் அணிக்கு பலமாக அமைய உள்ளது.

ஏனெனில் சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விகளுக்குக் காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த ரோஹித் சர்மா அதற்காக அசராமல் சதத்தை அடித்து தன்னுடைய திறமையை மீண்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுமாரான ஃபார்மில் இருக்கும் போது மெதுவாக விளையாடி சதத்தை அடிக்க வேண்டும் என்று ரோகித் சர்மா நினைக்கவில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பயமற்ற ரோஹித்:

மாறாக டக் அவுட்டானாலும் பரவாயில்லை என்ற வகையில் கொஞ்சமும் பயப்படாமல் அசத்திய ரோகித் சர்மா ஃபார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் பசித் பேசியது பின்வருமாறு. “இது போன்ற சூழ்நிலைகளில் அவர் டக் அவுட்டாவது மோசமான விஷயமாக இருக்கும்”

“ஆனால் அது போன்ற சூழ்நிலையிலும் 2023 உலகக் கோப்பை போல தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை முதல் 10 ஓவரில் விளையாடி ரோகித் சர்மா எதிரணியை ஒதுக்க வேண்டும். அந்த வகையில் விளையாடிய ரோஹித் சர்மா தன்னுடைய செயல்பாடுகளால் அனைவரையும் அமைதிப்படுத்தினார். நாம் அடிக்கடி ஃபார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்று சொல்வோம்”

- Advertisement -

இங்கிலாந்துக்கு பாடம்:

“இன்று ரோஹித் சர்மா அதைக் காண்பித்துள்ளார். இந்தத் தொடரை இந்தியா வென்று இருக்கலாம். ஆனால் இங்கிலாந்து ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தால் கூட அவர்கள் இந்தத் தொடரில் அனுபவத்தைச் சம்பாதிப்பார்கள். அந்த வகையில் அவர்கள் இந்தத் தொடரில் எதையும் இழக்கவில்லை. அவர்கள் ஆடுகளங்களை நன்றாக படித்துக் கொண்டுள்ளார்கள்”

இதையும் படிங்க: 3 – 0ன்னு தோத்தாலும் கவலையில்ல.. இதை வெச்சு சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியாவை வீழ்த்துவோம்.. பென் டக்கெட்

“இந்தியா போன்ற டாப் கிளாஸ் அணிக்கு எதிராக விளையாடி அவர்கள் அனுபவத்தைப் பயனாக பெற்றுள்ளார்கள். இந்தத் தொடரிலிருந்து அவர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக நல்லப் பாடத்தை எடுத்து வருவார்கள். எனவே இப்போதும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபிஸ் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் எனது அணிகளில் ஒன்றாகவே இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி புதன்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement