அஸ்வின் இந்தியாவின் சீரியஸ் வின்னர்.. கோலி விட்ருக்க மாட்டாரு.. கம்பீர் – ரோஹித் தான் காரணம்.. பசித் அலி

Basit Ali
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் 2012 – 2024 காலகட்டங்களில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருக்க அஸ்வின் முக்கிய பங்காற்றினர்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது வென்ற வீரர் என்ற முத்தையா முரளிதரன் உலக சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். அப்படிப்பட்ட அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட வெளிநாட்டு போட்டிகளில் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிப்பதில்லை.

- Advertisement -

ரோஹித் – கம்பீர் காரணம்:

அந்த வரிசையில் தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனாலேயே ஏமாற்றமடைந்த அஸ்வின் அதிரடியான ஓய்வை அறிவித்துள்ளார் என்று சொல்லலாம். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் அல்ல சீரியஸ் (தொடர்கள்) வின்னர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட அஸ்வின் இப்படி ஓய்வு பெறுவதற்கு ரோஹித் – கௌதம் கம்பீர் தான் காரணம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு. “அஸ்வின் செய்தியாளர்கள் சந்தித்ததை நானும் பார்த்தேன். அவர் ஓய்வு பற்றி அதிகமாக பேசியதாக தெரியவில்லை. ஒருவேளை விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வினை இப்படி பாதி தொடர்களிலேயே ஓய்வு பெற விட்டிருக்க மாட்டார் என்று உறுதியாக சொல்வேன். ஒன்று நியூசிலாந்து தொடரில் தமக்கு முன்பாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்ட போதே அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்”

- Advertisement -

சீரியஸ் வின்னர்:

“அல்லது 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் முடிந்த பின் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் பாதியில் ஓய்வை அறிவிக்க அனுமதித்தது ரோஹித் மற்றும் கௌதம் கம்பீரின் மோசமான முடிவு. அவர்கள் அஸ்வினுடன் அமர்ந்து அடுத்த 2 போட்டிகளில் நீங்கள் இந்தியாவுக்கு தேவை என்று பேசியிருக்க வேண்டும். ஆம் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அசத்தவில்லை”

இதையும் படிங்க: தமிழன் என்பதால் இந்த சூழ்ச்சி.. ஃபீனிக்ஸ் பறவை மாதிரி வந்த அஸ்வின் நடந்தது அநியாயம்.. பத்ரிநாத் ஆதங்கம்

“ஆனால் அவர் ஒரு போட்டியில் மட்டும் அசத்தக்கூடியவரா? அஸ்வின் மேட்ச் வின்னர் கிடையாது. சீரியஸ் வின்னர். தொடர்ச்சியாக தொடர்களை வென்று கொடுக்கக்கூடிய ஒருவர் மேட்ச் வின்னராக இருப்பதை விட வித்தியாசமானவர்” என்று கூறினார். முன்னதாக முதல் போட்டியிலேயே ஓய்வு பெற முடிவெடுத்த அஸ்வினை தாம் பேசி சமாதானப்படுத்தி 2வது போட்டியில் விளையாட வைத்ததாக ரோகித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement