கிபர்ஹா நகரில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 125 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. பின்னர் சேசிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்களை எடுத்து சவாலை கொடுத்தார்.
குறிப்பாக ஹென்றிச் க்ளாஸென், டேவிட் மில்லர் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை அவரின் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். ஆனால் கடைசிக்கட்ட ஓவர்களில் ஆவேஸ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சுமாராக பந்து வீசினார்கள். அதை பயன்படுத்தி ஸ்டப்ஸ் 47*, ஜெரால்டு கோட்சி 19* ரன்கள் எடுத்து தென்னாபிரிக்காவை 19 ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.
சுயநலமாக பாண்டியா:
அதனால் முதல் போட்டியில் வென்ற இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த தென்னாபிரிக்கா 1 – 1* (4) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக அந்த போட்டியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா கேப்டன் சூரியகுமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை. அதனால் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பாண்டியா 39* (45) ரன்கள் குவித்து இந்தியா 120 ரன்கள் தாண்ட உதவினர்.
இருப்பினும் கடைசிக்கட்ட ஓவர்களில் எதிர்புறம் அர்ஷ்தீப் சிங் பேட்டிங் செய்தார். அவருக்கு பேட்டிங் தெரியாது என்று கருதிய பாண்டியா கடைசிக்கட்ட ஓவர்களில் வாய்ப்பு கிடைத்தும் சிங்கள் எடுத்து ஸ்ட்ரைக்கை கொடுக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டி தமக்கு கிடைத்த 6 பந்துகளில் அர்ஷ்தீப் 1 சிக்ஸர் உட்பட 7* (6) ரன்கள் குவித்து இந்தியா 120 ரன்கள் தாண்ட முக்கிய பங்காற்றினார்.
பசித் அலி விமர்சனம்:
இந்நிலையில் அர்ஷ்தீப்புக்கு சுயநலத்துடன் ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் பாண்டியா சுயநலத்துடன் விளையாடியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த பாண்டியா அவுட்டாகாமல் தமக்காக விளையாடினார். அவர் ஏன் தனக்காக விளையாடினார்? அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாட தயாராகிறார் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: தங்கம் மாதிரி ஒரு வீரர் இருக்கும்போது அவர் ஏன் பிளேயிங் லெவனில் விளையாடல – ராபின் உத்தப்பா ஆதங்கம்
“அவர் விளையாடிய விதத்தை பார்த்தது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அவர் சிங்கிள் கூட எடுக்கவில்லை. அர்ஷ்தீப் சிங் சிக்ஸர் அடித்தார். பாண்டியா சிங்கிள்களை தவிர்ப்பதற்கு இந்தியா ஒன்றும் அந்த நேரத்தில் 9 விக்கட்டுகளை இழந்து விடவில்லை. 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திந்திருந்தது. எனவே அவர் அப்படி செய்திருக்கக் கூடாது” என்று கூறினார்.



