இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகுமா.? திருப்பி அடிக்குமா .? பயத்தில் இங்கிலாந்து வீரர்.!

bari
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோற்றதால் இங்கிலாந்து அணி (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் நாட்டிங்காமில் வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்குகிறது. இப்போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

baristow

முதல் இரு ஆட்டங்களை வைத்து நாம் இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஏன் என்றால் இந்தியா டெஸ்ட் கிரிக்கட்டின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அணி, மேலும் நாங்கள் எங்களது சொந்த மண்ணில் ஆடுகிறோம். எனவே இங்குள்ள சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி வெற்றி பெறுகிறோம். அடுத்த ஆட்டத்தில் சூழ்நிலை எங்களுக்கு எதிராக அமையலாம். எனவே இந்திய அணியை நாங்கள் குறைத்து மதிப்பிட மாட்டோம். என அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் சிலர் இங்கிலாந்து அணி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்று பேசிக்கொள்கின்றனர். அனால் இன்னும் தொடர் முடிவுக்கு வரவில்லை. அதனால் இப்பொது அதுகுறித்து நாம் கணிக்க முடியாது. மேலும் நாங்கள் தொடரின் வெற்றிக்கு மிக அருகில் இருப்பதால் மெத்தனமாக ஆட கூடாது என்பதில் உறுதியா உள்ளோம். எனவே வரும் போட்டிகளில் கூட முதல் இரு போட்டிகளை போல கவனமுடன் விளையாடுவோம் என கூறி தனது கருத்தை முடித்தார்.

baristow 2

இந்திய அணி கண்டிப்பாக கடைசி மூன்று போட்டிகளை தோற்க நினைக்காது. மேலும் விராட் கோலி எப்போதும் வெற்றியை விரும்ப கூடியவர். கடுமையான விமர்சனங்கள் மற்றும் அழுத்தத்தின் நடுவே இந்திய அணி சனிக்கிழமை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றனர்.

Advertisement