கத்துக்குட்டின்னு நெனச்சீங்களா – ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸி போன்ற டாப் அணிகளை மிஞ்சி வங்கதேசம் படைத்த அபார சாதனை

IND vs BAn Mushfiqar Rahim Shreyas Iyer
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கடைசி நேரத்தில் மெகதி ஹசன் அதிரடியால் வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை சுவைத்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று வங்கதேசம் டிசம்பர் 7ஆம் தேதியான்று நடைபெற்ற 2வது போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஒரு கட்டத்தில் 69/6 என ஆரம்பத்திலேயே திண்டாடியது. இருப்பினும் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 148 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த முகமதுல்லா 77 ரன்களும் முதல் போட்டியை போலவே சிம்ம சொப்பனமாக கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற மெஹதி ஹசன் சதமடித்து 100* (83) ரன்களும் விளாசினர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 272 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் களமிறங்காத நிலையில் விராட் கோலி 5, சிகர் தவான் 8, சுந்தர் 11, ராகுல் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தனர். அதனால் 65/4 என தடுமாறிய இந்தியாவை 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் பட்டேல் 56 ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள்.

கத்துக்குட்டின்னு நெனச்சிங்களா:

அதனால் வேறு வழியின்றி கடைசியில் காயத்துடன் களமிறங்கி வெற்றிக்கு போராடிய கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 51* (28) ரன்கள் குவித்தும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் இந்தியா பரிதாபமாக தோற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக எபோதத் ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் 100* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய மெஹதி ஹசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றுள்ள வங்கதேசம் தங்களை சொந்த மண்ணில் புலி என்பதை நிரூபித்துள்ளது.

Mehidy Hasan and Mahmudullah

இதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லவில்லை. ஏனெனில் பொதுவாகவே எந்த அணியும் கத்துக்குட்டி போல எலியாக இருந்தாலும் விளையாடி பழகிய சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் புலியாக சீறிப் பாய்ந்து வெற்றி பெறுவது வழக்கமாகும். அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் எப்போதுமே ரசிகர்களின் அமோக ஆதரவை கொண்ட வங்கதேசம் கடந்த 2015இல் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியாவை இதே போல் 2 – 1 (3) என்ற கணக்கில் வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

தற்போது 7 வருடங்கள் கழித்து மீண்டும் சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொண்ட வங்கதேசம் மீண்டும் அதே போல் அட்டகாசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இத்தொடரை வென்று சாதித்துள்ளது. அதை விட 2012 டிசம்பர் முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக சராசரியில் வெற்றிகளை பதிவு செய்து வரும் அணியாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற டாப் அணிகளை பின்னுக்கு தள்ளி வங்கதேசம் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது. அந்த பட்டியல:
1. வங்கதேசம் : 70.91%
2. ஆஸ்திரேலியா : 70.18%
3. நியூசிலாந்து : 67.90%
3. ஆப்கானிஸ்தான் : 67.16%
5. தென் ஆப்பிரிக்கா : 67.11%
6. இந்தியா : 63.51%

bangladesh

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் கடைசியாக பங்கேற்ற 14 தொடர்களில் 13 வெற்றிகளை பதிவு செய்துள்ள அந்த அணி 1 தொடரில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. இதிலிருந்து என்ன தான் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் எதிரணிகளை தோற்கடிக்கும் புலியாகவே வங்கதேசம் செயல்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் கூட நிறைய ரசிகர்கள் அந்த அணியை கத்துக்குட்டி என்றே நினைக்கிறார்கள்.

சொல்லப்போனால் இந்த தொடரில் கூட இந்திய வீரர்கள் முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததும் கத்துக்குட்டியான வங்கதேசம் என்ன செய்து விடப் போகிறது? என்ற வகையில் கதை முடிந்ததாக நினைத்து அஜாக்கிரதையாக செயல்பட்டனர். அதை பயன்படுத்தி வங்கதேசம் சரித்திர வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement