இது நாகினி டான்ஸ் இல்ல..குரங்கு டான்ஸ் மாதிரி இருக்கு..இந்திய வீரரை கிண்டல் செய்த பங்களாதேஷ் ரசிகர்.

nagin
- Advertisement -

இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியின் போது சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி பாக்ஸில் இருந்து கொண்டு பிரெட்லீ யிடம் பாம்பு டான்ஸ் ஆடிக்காம்பித்துள்ளார். தற்போது அந்த காட்சி டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. தற்போது வங்கதேச ரசிகர்கள் சுனில் கவாஸ்கர் செய்த செயலை கண்டித்தும் திட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

dance

- Advertisement -

நடந்து முடிந்த நிடாஸ்கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பிற்கும் சலசலப்பிற்கும் பஞ்சமில்லை எனலாம். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருபெரும் அணிகள் அமைதியாக விளையாடிட கத்துக்குட்டி அணியான வங்கதேசமோ மைதானத்தில் கிரிக்கெட் மட்டுமில்லாமல் பாம்பு டான்ஸ் ஆடி எதிரணியினரையும் இலங்கை ரசிகர்களையும் வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டுசென்றனர்.

இதையும் படியுங்கள் :
இறுதிப்போட்டியில் அவுட் ஆன பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன – விளக்கம் அளிக்கும் விஜய்சங்கர்

வங்கதேச அணியிடம் இந்த தொடரில் இருமுறை இலங்கை அணி தோற்றது. இரண்டு முறையும் இலங்கை ரசிகர்களுக்கு இலங்கை அணி தோற்றதை விட வங்கதேச வீரர்கள் மைதானத்தில் வைத்து செய்த செயல் தான் எரிச்சடலைய வைத்தது எனலாம்.ஒவ்வொரு முறை வங்கதேச அணி வெற்றிபெற்ற போதும் மைதானத்தில் வெற்றியை கொண்டாடிடும் விதமாக பாம்பு டான்ஸ் ஆடினர். இலங்கையுடனான முதல் லீக்கின் போது வெற்றி பெற்ற போது வின்னிங் ஷாட் அடித்த முஷ்பிகூர் ரஹ்மான் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கையை அழவிட்டார்.

- Advertisement -

bangladesh1

கடைசி லீக்கில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போது ஒட்டுமொத்த அணியுமே பாம்பு டான்ஸ் ஆடியது. இதனால் இலங்கை வீரர்கள்  கோபமடைந்து மைதானத்திலேயே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது தனிக்கதை.இந்தியா – வங்கதேச அணிகளிடையேயான போட்டியின் போது கமெண்ட்ரி பாக்ஸில் சுனில் கவாஸ்கர் ஆடிய பாம்பு டான்ஸை பற்றி விமர்சித்து வருகின்றனர்.அதில் ஒரு வங்கதேச ரசிகர் “உங்களுடைய ஒழுக்கம் இதிலிருந்தே தெரிகின்றது” என விமர்சித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் “இவர் நாகினி டான்ஸ் ஆடியது போல இல்லை, உயிரியல் பூங்காவில் இருந்து தப்பித்துவந்த கோமாளி ஆடியது போல உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.மேலும் பலர் பலவிதமாக அவரை விமர்சித்து எழுதிவருகின்றனர்.ஆர்வக்கோளாறில் பாம்பு டான்ஸ் ஆடி தற்போது வங்கதேச ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றார்.

 

 

Advertisement