3 ஆவது செஷனோடு முடிவுக்கு வந்த பங்களாதேஷ் இன்னிங்ஸ் – பந்துவீச்சாளர்கள் அபாரம்

Umesh
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொமினுள் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்துவீசியது.

Shami

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி துவக்க வீரர்கள் இருவரது விக்கெட்டையும் 12 ரன்களுக்கு இழந்தது. அதன் கேப்டன் மொமினுள் ஹக் மற்றும் ரஹீம் ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் அவர்களுக்குப் பின் வந்த வீரர்கள் யாரும் நினைக்கவில்லை.

பங்களாதேஷ் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Umesh

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா உமேஷ் யாதவ் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். அஷ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

Advertisement